Skip to main content

Meta விளம்பர மேலாளரில் பிரச்சார முடிவுகளைக் கண்டறிதல்

  • By Meta Blueprint
  • Published: Jul 14, 2022
  • Duration 5m
  • Difficulty Intermediate
  • Rating
    Average rating: 0 No reviews

இந்தப் பாடம் பிரச்சாரம், விளம்பரத் தொகுப்பு மற்றும் விளம்பர நிலையில் பிரச்சார முடிவுகளை மதிப்பாய்வு செய்யும் விதம் குறித்த விஷயங்களைக் கற்பிக்கும்.

இந்தப் பாடம் உங்களை இவற்றுக்குத் தயார்படுத்துகிறது:

  • பிரச்சாரம், விளம்பரத் தொகுப்பு மற்றும் விளம்பர நிலையில் முடிவுகளைக் காணலாம்.
  • உங்கள் பிரச்சாரத்திற்கு மிகவும் பொருத்தமான அளவீடுகளைக் கண்டறியலாம்.

Meta விளம்பர மேலாளரில் பிரச்சார முடிவுகளைப் புரிந்துகொள்ளுதல்

விளம்பர மேலாளரில் உள்ள அறிக்கை வசதியானது ஒரு வணிகம் அதன் விளம்பர இலக்குகளை அடைவதற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைத் தீர்மானிக்க உதவும். விளம்பர மேலாளரில் உள்ள அளவீடுகளைப் பயன்படுத்தி, எது நன்றாக வேலை செய்கிறது மற்றும் எதை மேம்படுத்தலாம் என்பதை அறியலாம், அதை எதிர்கால விளம்பரப் பிரச்சாரங்களில் கடைப்பிடிக்கலாம். விளம்பரங்கள் இயங்கும்போது அவற்றை மேம்படுத்த விளம்பர மேலாளரில் உள்ள அளவீடுகளையும் பயன்படுத்தலாம்.

விளம்பர மேலாளரில் இயல்புநிலை அளவீடுகள்

பிரச்சாரம் முடிந்ததும், அதன் முடிவுகளை விளம்பர மேலாளரில் பார்க்கலாம். விளம்பர மேலாளர் டாஷ்போர்டில், பிரச்சாரத்தின் ஒவ்வொரு நிலையையும் (பிரச்சாரம், விளம்பரத் தொகுப்பு மற்றும் விளம்பரம்) பார்க்கலாம். இங்கு நீங்கள் கடந்த கால மற்றும் தற்போதைய பிரச்சாரங்கள், விளம்பரத் தொகுப்புகள் மற்றும் விளம்பரங்களின் செயல்திறனைப் பிரச்சார நோக்கத்துடன் தொடர்புடைய அளவீடுகளைப் பயன்படுத்தி பார்க்கலாம், ஒப்பிடலாம். ஒவ்வொரு நிலையியிலும் நீங்கள் அணுகக்கூடிய வெவ்வேறு அளவீடுகளைப் பார்ப்போம்.

LaLueur

முந்தைய பாடத்தில் நாம் கற்றுக்கொண்டது போல, சிலிகான் இல்லாத, பாரபென் இல்லாத மற்றும் தாவர அடிப்படையிலான தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் அழகுசாதன தயாரிப்பு நிறுவனம் LaLueur ஆகும். நிறுவனம் தனது வலைதளத்திலும் பொட்டிக் முடி சலூன்கள் மூலமாகவும் பொருட்களை விற்பனை செய்கிறது.*

 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆலோசகரான ஜஹ்ரா, LaLueur-க்கான டிஜிட்டல் இருப்பை உருவாக்க உதவுவதற்கும் அதன் சமீபத்திய கேசப் பராமரிப்புத் தயாரிப்புகளுக்கான அறிதலை ஏற்படுத்துவதற்கும் அழைத்து வரப்பட்டுள்ளார். 

கடந்த காலப் பிரச்சாரங்களின் தரவையும், புதிய பிரச்சாரத்தின் வரவிருக்கும் முடிவுகளையும் பயன்படுத்தி, LaLueur நிறுவனத்திற்கு ஜஹ்ரா எவ்வாறு உதவ முடியும் என்பதை நன்கு புரிந்துகொள்ள அளவீடுகளைப் பகுப்பாய்வு செய்வார். நீங்கள் முதலில் விளம்பர மேலாளரைத் திறக்கும்போது, LaLueur விளம்பர மேலாளர் கணக்கிலிருந்து கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றே இயல்புநிலை டாஷ்போர்டு தோற்றமளிக்கும்.


*பொறுப்புத்துறப்பு: LaLueur என்பது Meta Creative Shop-ஆல் வடிவமைக்கப்பட்ட ஒரு கற்பனையான வணிகமாகும். நிஜ வாழ்க்கை வணிகங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் ஏதேனும் ஒற்றுமைகள் இருக்குமானால் அவை உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை அல்ல.

ஓர் அறிக்கை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதைப் பற்றி அறிய சிறிது நேரம் எடுத்துக்கொள்வோம். நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய மூன்று பிரிவுகள் (பிரச்சாரங்கள், விளம்பரத் தொகுப்புகள் மற்றும் விளம்பரங்கள்) உள்ளன, உங்கள் டாஷ்போர்டு பிரச்சாரப் பிரிவைக் காட்டும் வகையில் தானாகவே இயல்புநிலையாக இருக்கும். 

மேலும் அறிய, ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தவும்.

ஒவ்வொரு பிரிவிலும், உங்கள் பிரச்சாரங்களின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய வெவ்வேறு அளவீடுகளை வழங்கும் நெடுவரிசைகளைக் காணலாம். LaLueur-க்கான இயல்புநிலைப் பிரச்சார அறிக்கையில் தோன்றும் முக்கிய நெடுவரிசைகளைப் பார்ப்போம்.  


நிலை மற்றும் பிரச்சாரத் தகவல்கள். இயல்புநிலை டாஷ்போர்டு அமைப்புகளில், முதல் இரண்டு நெடுவரிசைகள் விளம்பர டெலிவரி மற்றும் ஏல வியூகம் பற்றிய தகவல்களைக் காட்டுகின்றன. 


கீழே உள்ள அறிக்கையில் நிலை மற்றும் பிரச்சாரத் தகவல்களை ஆராயுங்கள்.

மேலும் அறிய, அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும். 

அளவீடு முடிவுகள். ஒரு விளம்பரப் பிரச்சாரம் எத்தனை பயனர்களைச் சென்றடைந்தது மற்றும் அது அடைந்த முடிவுகளை, அளவீடு முடிவுகள் அளவீடுகள் உங்களுக்குக் கூறுகின்றன.

 

  • முடிவுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட நோக்கம் மற்றும் விளம்பர டெலிவரி உகந்ததாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு விளம்பரம் ஒரு முடிவை அடையும் எண்ணிக்கை இதுவாகும்.

  • பார்வை: குறைந்தது ஒருமுறையாவது விளம்பரங்களைப் பார்த்த பயனர்களின் எண்ணிக்கை இதுவாகும். பார்வை என்பது இம்ப்ரஷன்களிலிருந்து வேறுபட்டதாகும், இதில் ஒரே நபர் விளம்பரங்களைப் பலமுறை பார்த்த எண்ணிக்கையும் அடங்கும்.

  • இம்ப்ரஷன்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குப் பார்வையாளர்களுக்கு எவ்வளவு அடிக்கடி விளம்பரங்கள் திரையில் இருந்தன என்பதை இது அளவிடுகிறது.


மேலும் அறிய, ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தவும். 

செலவு அளவீடுகள். விளம்பர பட்ஜெட் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதற்கான அளவீடுகளாகும். 

 

  • ஒரு முடிவுக்கான செலவு: இந்த அளவீடு, செலவழித்த மொத்தத் தொகையை முடிவுகளின் எண்ணிக்கையால் வகுப்பதால் கணக்கிடப்படுகிறது. பிரச்சாரம் அதன் விளம்பர நோக்கங்களை எவ்வளவு சிக்கனமாக அடைந்தது என்பதை இது குறிக்கிறது. 

  • செலவிட்ட தொகை: இது ஒரு பிரச்சாரத்திற்கான, கணக்கிடப்பட்ட மொத்தச் செலவாகும். எடுத்துக்காட்டாக, இந்த நெடுவரிசை மதிப்பாய்வில் உள்ள பிரச்சாரத்திற்கு $0.00 அல்லது சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டு இயங்கத் தொடங்கிய பிரச்சாரத்திற்கு $6.57 என்று காட்டலாம். இந்த எண்ணிக்கை எப்போதும் பட்ஜெட்டை விடக் குறைவாக இருக்க வேண்டும்.


மேலும் அறிய, ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தவும். 

விளம்பர மேலாளரில் உள்ள அறிக்கையிடல் கட்டுப்பாடுகள்

பல அளவீடுகளுக்கு விளம்பர மேலாளரில் உள்ள இயல்புநிலை அமைப்புகளை நீங்கள் சார்ந்திருக்கலாம். உங்களுக்கு மிகவும் முக்கியமான அளவீடுகளைக் காட்டவும், உங்கள் வணிக நோக்கங்களுடன் சிறப்பாகச் சீரமைக்கவும் உதவும் வகையில் அறிக்கைகளைத் தனிப்பயனாக்கலாம். 


LaLueur டிராஃபிக்கை மையமாகக் கொண்ட விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிவதில் ஜஹ்ரா உற்சாகமாக இருக்கிறார், எனவே விளம்பர அறிக்கையிடல் டாஷ்போர்டில் உள்ள சில கட்டுப்பாடுகளை அவர் சரிசெய்ய முடிவு செய்தார். 


ஜஹ்ரா தனக்கு மிகவும் பொருத்தமான தரவை ஒழுங்கமைக்கவும், எடுக்கவும் மற்றும் காட்சிப்படுத்தவும் விளம்பர மேலாளரில் பயன்படுத்தக்கூடிய கருவிகளைப் பார்ப்போம்.

மேலும் அறிய, பிரிவுகளை ஆராயவும். 


விளம்பர மேலாளரில் நீங்கள் பார்க்கும் முடிவுகளைக் கண்டறிந்து தனிப்பயனாக்க, தேடல் பட்டியைப் பயன்படுத்தவும். இதன்படி தேடலாம்: 

  • பிரச்சாரப் பெயர்

  • விளம்பரத் தொகுப்புப் பெயர்

  • விளம்பரப் பெயர்

  • பிரச்சார அடையாள எண்

  • விளம்பரத் தொகுப்பு அடையாள எண்

  • Ad ID

  • பிரச்சார டேக்

எடுத்துக்காட்டாக, ஜஹ்ரா தனக்கு விருப்பமான விளம்பரப் பிரச்சாரங்களின் குறிப்பிட்ட தொகுப்பைக் கொண்டு வர, கேசப் பராமரிப்பு பிராண்டு விழிப்புணர்வு போன்ற பிரச்சாரப் பெயரைத் தேடலாம். 


உங்கள் விளம்பர அறிக்கையைத் தனிப்பயனாக்குதல்

தரவு அட்டவணையில் நெடுவரிசைகளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் விளம்பர அறிக்கை டாஷ்போர்டையும் தனிப்பயனாக்கலாம். உங்கள் அறிக்கையில் நீங்கள் சேர்க்கக்கூடிய அளவீடுகள் நான்கு வெவ்வேறு வகைகளில் உள்ளன.

 

1. செயல்திறன். முடிவுகள், பார்வை, இடைவெளி மற்றும் பதிவுகள் போன்ற அளவீடுகளை உள்ளடக்கியது.


2 ஈடுபாடு. பக்க பதிவுகள், மெசேஜிங் அம்சம், மீடியா, கிளிக்குகள் மற்றும் அறிதல் போன்ற அளவீடுகளை உள்ளடக்கியது.


3 கன்வர்ஷன்கள். வலைதளக் கன்வர்ஷன்கள், வலைதள வாங்குதல்கள், ஒரு வலைதள கன்வர்ஷனுக்கான செலவு, அலைபேசி செயலி நிறுவல்கள் மற்றும் அலைபேசி செயலி வாங்குதல்கள் போன்ற அளவீடுகள் அடங்கும்.


4 அமைப்புகள். தொடக்கத் தேதி, முடிவுத் தேதி, விளம்பரத் தொகுப்புப் பெயர், விளம்பர அடையாள எண், டெலிவரி, ஏலம் மற்றும் நோக்கம் போன்ற அளவீடுகள் அடங்கும்.

LaLueur குழு அவர்களின் கேசப் பராமரிப்பு பிராண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் காணொளி விளம்பரத்தைச் சேர்த்தது. ஈடுபாட்டைத் தனது நோக்கமாக ஜஹ்ரா தேர்வு செய்யாவிட்டாலும், எதிர்காலப் பிரச்சாரங்களுக்கு அதை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்த, எத்தனை பயனர்கள் காணொளியைப் பார்த்தார்கள் என்பதைக் காட்ட, தனது விளம்பர மேலாளர் அறிக்கையின் நெடுவரிசைகளைத் தனிப்பயனாக்குகிறார்.

விளம்பர முடிவுகளைக் காட்சிப்படுத்த விளக்கப்படங்களை உருவாக்கவும்

எண் முடிவுகளைப் பார்ப்பதுடன், விளம்பரச் செயல்திறனைக் காட்சிப்படுத்தும் விளக்கப்படங்களையும் நீங்கள் பார்க்கலாம். இந்த விளக்கப்படங்களைப் பார்க்க, ஒரு பிரச்சாரம், விளம்பரத் தொகுப்பு அல்லது விளம்பரப் பெயர் மீது ஹோவர் செய்து, பின்னர் விளக்கப்படங்களைக் காட்டுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் அறிய, அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும். 

விளம்பர மேலாளர் அறிக்கையிடலில் பிரச்சாரம், விளம்பரத் தொகுப்பு மற்றும் விளம்பர நிலையில் கருவிகளும் அளவீடுகளும் உள்ளன, அவற்றை விளம்பரப் பிரச்சாரங்களின் முடிவுகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தலாம். அடுத்து, பிரச்சார முடிவுகளை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யலாம் மற்றும் பகுப்பாய்வு செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

உங்கள் விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறியும் பிற வழிகள்

விளம்பர மேலாளரில் பிரச்சார முடிவுகளைப் பார்ப்பதுடன், Facebook பக்கப் புள்ளிவிவரங்கள் மற்றும் Instagram புள்ளிவிவரங்கள் மூலம் உங்கள் உள்ளடக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். 


Facebook பக்கப் புள்ளிவிவரங்களைக் காட்டு

உங்கள் Facebook பக்கத்தில் உங்கள் விளம்பரங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் பார்க்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:

1
2
3
4
5
6

Instagram புள்ளிவிவரங்களைப் பார்த்தல்

உங்கள் கட்டணச் செயல்பாட்டின் செயல்திறனைப் பற்றி மேலும் அறிய, Instagram புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட பதிவுகள், ஸ்டோரிக்கள், காணொளிகள், ரீல்ஸ் மற்றும் நேரலைக் காணொளிகள் மீதான ஈடுபாடு பற்றிய புள்ளிவிவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். விளம்பரப் புள்ளிவிவரங்களைப் பார்க்க உங்கள் அலைபேசி சாதனத்தில் உங்கள் Instagram வணிகம் அல்லது கிரியேட்டர் கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும்.

Instagram-இல் உங்கள் விளம்பரங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை எப்படிப் பார்ப்பது என்பதை அறிய, கீழே உள்ள அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.

நினைவில்கொள்வதற்கான முக்கிய விஷயங்கள்

விளம்பர நோக்கங்கள் மற்றும் வணிக இலக்குகளின்படி, பிரச்சாரம், விளம்பரத் தொகுப்பு மற்றும் விளம்பர நிலையில் விளம்பர மேலாளரில் வெவ்வேறு அளவீடுகள் மற்றும் முடிவுகளைக் கண்காணிக்கலாம்.




விளம்பர நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான அளவீடுகளைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்ய, கூடுதல் கருவிகளைப் பயன்படுத்தலாம்.